பதிவு செய்த நாள்
29
டிச
2022
05:12
மூலம்
நண்பர்களையும் உறவினர்களையும் அன்பாலும் பாசத்தாலும் வீழ்த்தும் உங்களுக்கு இந்த ஆண்டில் அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். அவ்வப்போது உடற்சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மென்மையாக பேசுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை அடிக்கடி இருக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை, தாமதம் ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபடும் போது திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதுர்யமாக பேச வேண்டியிருக்கும். பணியாளர்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். அடிக்கடி வெளியூர், வெளிநாடு என பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.
பெண்கள் எந்த காரியத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலமாக இந்தாண்டு அமையும். கடந்த கால உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பர். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். சேமிப்பதிலும் ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்காலம் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.
மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பான முடிவுகள் எடுப்பதை தீர ஆலோசித்து எடுப்பது நல்லது. சக மாணவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. படிப்பில் சிறந்து விளங்கி ஆசிரியர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடு மூலம் வெற்றி காண்பீர்கள்.
பரிகாரம் : முருகனுக்கு செவ்வாயன்று பூமாலை சாத்தி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘சுப்பிரமணிய புஜங்கம்’ தினமும் பாராயணம் செய்யவும்.
பூராடம்
எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் உங்களுக்கு இந்த ஆண்டு சுபச்செலவு உண்டாகும். தேவையற்ற குற்றச்சாட்டில் இருந்து வெளியில் வருவீர்கள். உடல்நலத்தில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவிகள் கிடைக்கும். காரிய தடை, தாமதம் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.
குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடும்பத்தினருடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. பணியாளர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மின்சாரம், தீ, ஆயுதம் இவற்றை கையாளும் போது கவமனாக இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பாக பயணங்கள் அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும்.
பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம். வரவுக்கு ஏற்ற செலவும் அதிகரிக்கும். மற்றவர்கள் பிரச்னை தீர பாடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு, வெற்றியைத் தேடித்தரும்
கலைத்துறையினருக்கு நன்மையான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும். முன்னேற்றம் ஏற்படப் போவது உறுதி. நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வளர்ச்சிக்கு வழிவகுப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம் : கோயிலுக்குச் சென்று பெருமாளை தினமும் தரிசியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: கோளறு திருப்பதிகத்தை தினமும் படியுங்கள்.
உத்திராடம் 1
மற்றவர் உணர்வுக்கு மதிப்பளிக்கும் உங்களுக்கு இந்த ஆண்டில் மூலம் பலவிதமான நன்மையை அடையப் போகிறீர்கள். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட துாரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீரென மனதில் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரவு திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குடும்பத்தினர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவும்,
தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும். பணியாளர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.
பெண்களுக்கு குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதுார தகவல்கள் இனிய தகவல்களாக வரும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனை தக்க நேரத்தில் கை கொடுக்கும்.
அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். யாரிடமும் வீண் பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மகிழ்வீர்கள்.
கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் பணவாய்ப்புகள் கைகூடும். சக கலைஞர்களிடையே உங்கள் கவுரவம் அதிகரிக்கும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் யோகம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிக்கனியை பெற விடாமுயற்சியுடன் உழைத்திடுங்கள்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பர். சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். கண்ணும் கருத்துமாக பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம் : ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசிக்க நன்மை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தை தினமும் படியுங்கள்.