அய்யப்பன் தங்க அங்கி சுமந்து செல்ல செஞ்சி பக்தருக்கு 10வது ஆண்டாக வாய்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2022 01:12
செஞ்சி: சபரி மலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கியை செஞ்சியை சேர்ந்த பக்தர் சுமந்து சென்றார்.
சபரி மலையில் மண்டல பூஜையின் நிறைவு நாள் அன்று அய்யப்பனுக்கு தங்கி அங்கி அணிவிக்கின்றனர். ஆண்டு தோறும் தங்க அங்கியை பம்பையில் உள்ள கன்னிமூல கணபதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு கொண்டு செல்வார்கள். தங்க அங்கி எடுத்து செல்லும் சேவையை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர். கன்னி மூல கணபதி கோவிலில் துவங்கி நீலிமலை, அப்பாச்சிமேடு, சரங்கொத்தி வழியாக 18ம் படியை அடைந்து சன்னிதானத்தில் தங்கி அங்கியை சமர்ப்பிப்பார்கள். மொத்தம் 8 பக்தர்கள் இதை தலை மீது சுமந்து எடுத்து செல்வார்கர், இதில் தமிழகத்தை சேர்ந்த 4 பக்தர்களுக்கும், கேரளாவை சேர்ந்த 4 பக்தர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வருகின்றனர். செஞ்சியை சேர்ந்த பக்தர் செந்தில்குமார், அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தில் சபரிமலை எமெர்ஜின்சி துணை தலைவராக உள்ளார். கார்த்திகை மாதம் 1ம் தேதி துவங்கி மகர ஜோதிவரையில் அங்கு தங்கி சேவை பணி செய்து வருகின்றார். இவருக்கு கடந்த 10 ஆண்டாக தங்க அங்கியை சுமந்து செல்லும் வாய்ப்பை அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தினர் வழங்கினர். இந்த ஆண்டும் கடந்த 26ம் தேதி தங்க அங்கியை செந்தில்குமார் சபரிமலைக்கு எடுத்து செல்லும் வாய்ப்பை பெற்றார்.