திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2023 01:01
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை திருத்தளிநாதர் கோயிலில் யோகநாராயணப் பெருமாள் பரமபதவாசல் கடந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருத்தளிநாதர் கோயிலில் யோக நிலையில் நாராயணப் பெருமாள் எழுந்தருளியுள்ளர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 5.30 மணிக்கு திருநாள் மண்டபத்தில் உற்ஸவ பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக் காப்பில் எழுந்தருளிய மூலவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து உற்ஸவருக்கு தீபாராதனை நடந்து பிரகார வலம் வந்தார். தொடர்ந்து பரம்பத வாசலுக்கு பாஸ்கர குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியருடன் பெருமாள் பரமபத வாசல் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளாக பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை வணங்கினர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது.