காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2023 11:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று வியாழக்கிழமை சங்கட ஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி விநாயகர் சாமி சன்னதி அருகில் கணபதி ஹோமப் பூஜைகளை சாஸ்திர பூர்வமாக நடத்தப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்தாரோடு) கணபதி ஹோமத்தில் ஈடுபடும் வகையில் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு கோயில் சார்பில் சங்கடஹர சதுர்த்தி அன்று நடத்தப்படும் கணபதி ஹோம பூஜைகளை கோயிலில் நடக்கும் ஆர்ஜித (சேவைகளில் இணைக்கப்பட்டு ) சேவையாக கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார் .ஒவ்வொரு சங்கட ஹர சதுர்தசி அன்று அஞ்சி அஞ்சி விநாயகர் சாமி சன்னதியில் ஏராளமான பக்தர்கள் தாங்கள் தனித்தனியாக நடத்த இயலாத கணபதி ஹோமத்தை ஆர்ஜித சேவையாக நிர்வகித்துக் கொண்டு தங்களின் குடும்பங்களுக்கு கணபதியின் அனுக்கிரகம் வழங்கும் வகையில் ஆர்ஜித சேவையில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை சங்கட ஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சி அஞ்சி கணபதி சன்னதி அருகில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் முன்னதாக கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர். கணபதி ஹோமத்தை சாஸ்திர பூர்வமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர் .தொடர்ந்து தீப தூப நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர். இந்த கணபதி ஹோம பூஜை நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு கோயில் ஆய்வாளர்கள் ஹரி யாதவ் மற்றும் கோயில் வேத பண்டிதர்கள் அர்தகிரி சாமி,அர்ச்சகர்கள் விஸ்வநாத் சர்மா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதே போல்
சித்தூர் மாவட்டம ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயிலிலும் இன்று சங்கடஹர சதுர்த்தி சிறப்பு ஹோம பூஜைகள், மற்றும் கணபதி விரத பூஜைகள் நடத்தப்பட்டன .காலை மற்றும் மாலை வேளைகளில் நடத்தப்பட்ட இந்த சங்கட ஹர விரத பூஜைகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் மற்றும் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.