பதிவு செய்த நாள்
11
பிப்
2023
10:02
கம்பம்: கம்பம் கண்ணுடையார் மற்றும் திருமாயம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ளது கண்ணுடையார் மற்றும் திருமாயம்மன் கோயில்கள். திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு, கணபதி, நவக்கிரகம். மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் கண்ணுடையார்) திருமாயம்மன், பரிவார தெய்வங்களை திருக்குடத்துக்குள் எழுந்தருள செய்து, முதல் கால யாக வேள்விகள் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக வேள்விகள் துவங்கி, ருத்ர ஜெபம், வேத பாராயணம் நடைபெற்றது தொடர்ந்து கோபுர கலசம் பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று அதிகாலை சிவாச்சாரியார் வழிபாடு, தொடர்ந்து நான்காம் கால யாக வேள்வி நடைபெற்றது. காலை 7 மணிக்கு கோ பூஜை, சுமங்கலி பூஜை , கன்னியா பூஜை, வடுக பூஜை, தொட்டு துலக்குதல்) உயிர் ஊட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து கண்ணுடையார் கோயில், திருமாயம்மன் விமானம், கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக கும்பிடு குடி மக்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், நாகமணியம்மாள் பள்ளி தாளாளர் காந்த வாசன், எம்.பி.எம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மகுட காந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சி.ராஜேந்திரன், பேராசிரியர் கண்ணன், குமரவேல், முருகேசன், ரமணன், கணேசன் உள்ளிட்ட கும்பிடு குடி மக்கள் செய்திருந்தனர்.