திருத்தணி: திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி கிராமத்தில், பழமை வாய்ந்த சர்வ மங்களீஸ்வர சுவாமி கோவிலில், கடந்த 10ம் தேதி முதல், சிவராத்திரி இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது.
மொத்தம் 10 நாட்கள் நடந்த விழாவில், நேற்று முன்தினம் இரவு இரண்டாம் ஆண்டு தெப்ப உற்சவம் நடந்தது. கோவில் எதிரே உள்ள மங்களீஸ்வரர் கோவில் குளத்தில் அமைத்த தெப்பத்தில் உற்சவ பெருமான், மாலை 6:30 மணிக்கு எழுந்தருளினார். பின், சிறப்பு தீபாரானை முடிந்ததும். கோவில் குளத்தை மூன்று முறை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பலில் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. உற்சவர் திருக்கல்யாணத்துடன் நடப்பாண்டிற்கான சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. இதில், திருத்தணி, வேலஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.