பங்குனி உத்திர பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு: இன்று கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 08:03
சபரிமலை, பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சுத்திகலச பூஜைகள் நடத்தினார். நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடைதிறந்து விளக்கேற்றினார். 5:30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சுத்திகலசபூஜைகள் தொடங்கினார். கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பூஜைகள் செய்த பின்னர் ஸ்ரீகோயிலை சுற்றி புண்ணியாகம் தெளித்து , தீபாராதனை நடத்தி பூஜைகள் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகலை 5:00 மணிக்கு நடை திறக்கபட்டது. காலை 9.45 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்று நடக்கிறது. ஏப்., நான்காம் தேதி வரை தினமும் மதியம் உற்சவபலியும், இரவில் ஸ்ரீபூதபலியும் நடக்கிறது. ஏப்., ஐந்தாம் தேதி பம்பையில் ஆராட்டு நடக்கிறது. அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.