வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2023 05:04
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்த குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏசு கிறிஸ்துவின் பாடுகளையும், துயரங்களையும் நினைவு கூறும் வகையிலும், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த முந்தைய 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தவக்காலம் பிப்.,22 ம் தேதி துவங்கியது. கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கபடும் நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் ஜெருசலேம் நகருக்கு நுழையும் போது மக்கள் அளித்த வரவேற்பை நினைவு கூறும் வகையில், தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. தேவாலயத்தில் பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மேல் மற்றும் கீழ் தேவாலயங்களில் ஆங்கிலம்,கொங்கணி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.