ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 07:04
ராமேஸ்வரம்: பங்குனி உத்திரம் விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் பூஜை நடந்தது.
இன்று பங்குனி உத்திர விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி அருகில் கோயில் குருக்கள் 1008 சங்குகளை வரிசைப்படுத்தினர். இதன் நடுவில் புனித கங்கை நீருடன் தங்க கலசம், திரிசங்கு வைத்தும் கோயில் குருக்கள் குண்டத்தில் யாகம் வேள்வி நடத்தி, 1008 சங்கு அபிஷேகம் பூஜை செய்தனர். இதனைதொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதனையடுத்து கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.