குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் தேரோட்டம் விமரிசை : பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2023 11:04
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 14ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. 5ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், விநாயகர், முருகர் ஆகிய நான்கு தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வடம் பிடித்து இழுக்கப்பட்டன. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை 11ம் தேதி காலை 9:30 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும் 12ம் தேதி சித்திர சபையில் காலை 10:00 மணிக்கு நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. 14ம் தேதி தீர்த்தவாரி காலை 9:20 மணிக்கு நடக்கிறது. கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.