திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்களுக்கு தங்கம், வெள்ளி கவசங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 08:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப். 14) மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படியாகிறது. மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியக்கிரீஸ்வரர், மஹாலட்சுமி, பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடக்கிறது.