பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
06:04
சூலூர்: ஓம் சக்தி... பராசக்தி... கோஷங்களுடன் பொன்னாக்காணி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த பொன்னாக்காணி கிராமத்தில் உள்ள, ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் பழமையானவை. மாரியம்மன் கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டது. செல்லாண்டியம்மன் கோவிலில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 24 ம்தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. தினமும் கால ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, மாரியம்மன் கோவில் ராஜ கோபுரம் மற்றும் ஸ்ரீ செல்லாண்டியம்மன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி, பராசக்தி என, கோஷமிட்டு, அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.