மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழக கேரள அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 04:04
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடுகள் குறித்து தமிழக கேரளா அதிகாரிகள் நேற்று கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
மங்கலதேவி கண்ணகி கோயில் கூடலுார் அருகே பளியன்குடி விண்ணேற்றி பாறை மலை உச்சியில் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. மே 5ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழக கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். கோயில் சீரமைப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து இடுக்கி சப் -கலெக்டர் அருண், கேரள வனத்துறை இணை இயக்குனர் பாட்டில் சுயோக், பீர்மேடு டி.எஸ்.பி. குரியா கோஸ், தேனி டி.ஆர்.ஓ. ஜெயபாரதி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., பால்பாண்டியன், தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட இரு மாநில அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.