பதிவு செய்த நாள்
29
ஏப்
2023
06:04
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேஸ்வர சுவாமி பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெற சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான ஊரந்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேஸ்வர சுவாமி யின் வருடாந்திர பிரம்மோற்சவப் பணிகளை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசுலு, கோயில் அதிகாரிகளுடன் இணைந்து இன்று சனிக்கிழமை ஆய்வு செய்தார். 30.04.2023 முதல் 10.05.2023 வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளதால் அஞ்சுரு. தாரக சீனிவாசுலு கிராமத்துக்குச் சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கோயில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரை களை வழங்கினார். இங்கு நடக்கும் வருடந்திர பிரம்மோற்சவ விழாவிற்காக முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் நடக்க உள்ளது 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகின்றன. இதற்காக கோயில் அதிகாரிகள் பிரம்மோற்சவ பணிகளை நிறைவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.மேலும் இங்குள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ சுவாமி சிலைகள் மிக அற்புதமாக உள்ளன என்றார். இந்த பிரம்மோத்சவத்தில், ஸ்ரீகாளஹஸ்தி நகர பக்தர்கள் (மக்கள்) மற்றும் ஊரந்தூர் கிராம மக்கள் கலந்து கொண்டு பிரம்மோற்சவத்தை சிறப்படையச் செய்ய வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரி லோகேஷ் ரெட்டி, பொறியியல் துறை அதிகாரி, மற்றும் அதிகாரிகள் வேணுகோபால் ரெட்டி, பவன்குமார், துணை கோயில்கள் பொறுப்பாளர் லட்சுமையா, கோயில் ஆய்வாளர் பாலாஜி, கோவில் பூசாரிகள் மற்றும் கிராம நிர்வாகிகள் நீலகண்ட ரெட்டி, விஜயபாஸ்கர் ரெட்டி, சந்திரா ரெட்டி, ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.