பேரூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், மகம் மாத குருபூஜை வழிபாடு நடந்தது.
பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், மகம் மாத குருபூஜை வழிபாடு, திருக்குட நன்னீராட்டு விழா மண்டல பூஜை வழிபாடு, அம்பலவாணர் திருமஞ்சன வழிபாடு நேற்று நடந்தது. சிறப்பு வழிபாட்டை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் இணைந்து நடத்தினர். தொடர்ந்து, பா ஒன்று பூ ஒன்று வழிபாடும், திருவாசக முற்றோதலும் நடந்தது. ஆதி சிவப்பிரகாசர் எழுதிய இட்டலிங்க கழி நெடில் என்ற நூலை, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் வெளியிட, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக்கொண்டார். அதன்பின், பேரொளிவு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.