புனர்பூசம் 4ம் பாதம்: எந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்ளும் இயல்புடைய புனர்பூச நட்சத்திர அன்பர்களே, இந்த மாதம் லாபாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலத்தைக் கொடுக்கும். எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச் சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். கலைத்துறையினர் பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் செய்வீர்கள். உடல் சோர்வோடு இருக்கும். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்கால நோக்கங்களை கருத்தில் கொண்டு உழைக்கத் தயாராகிவிடுவீர்கள். உங்களின் பொறுமையான செயல்பாடுகள் நல்ல பலனை அளிக்கும். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் நல்லபடியாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மனநிறை வுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். பரிகாரம்: கிராம தெய்வத்தை வணங்க செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சந்திராஷ்டமம்: ஜூன் 8, 9 அதிர்ஷ்ட நாள்: ஜூன் 2
பூசம்: பிறர் மதிக்கும்படி நடந்து கொள்ளும் பூசம் நட்சத்திர அன்பர்களே,நீங்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறமை பெற்றவர்கள். இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அலங்கார பதவிகள் வந்து சேரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் மாட்டிக் கொள்ள நேரும். அரசியல்வாதிகள் எவருக்கும் கடன் தரவேண்டாம். பிரயாணங்களில் முழு எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது. பரிகாரம்: வாராகியை வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். சந்திராஷ்டமம்: ஜூன் 9, 10 அதிர்ஷ்ட நாள்: ஜூன் 3
ஆயில்யம்: சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய ஆயில்யம் நட்சத்திர அன்பர்களே, உங்களுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு திறமைகள் வெளிப்படும். தான தருமங்களில் விருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங் களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். பரிகாரம்: துர்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சந்திராஷ்டமம்: மே 15; ஜூன் 10, 11 அதிர்ஷ்ட நாள்: ஜூன் 4
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »