ராமேஸ்வரம் அக்னி தீர்த்த சாலையில் மாடுகள் உலா : பக்தர்கள் பீதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2023 12:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் உலா வருவதால், பக்தர்கள் பீதி அடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் அக்னி தீர்த்த கடற்கரை சாலையில் உலா வரும் ஏராளமான மாடுகளுக்கு, அங்கு அகத்திகீரை விற்கும் சிலர், மாடுகளுக்கு கீரை தானம் கொடுங்கள் எனக் கூவி விற்கின்றனர். சில பக்தர்கள் மாடுக்கு கீரை தானம் கொடுக்கும் போது, இதனை உட்கொள்ளும் ஆவலில் ஓடி வரும் மாடுகள், நீராடி வரும் பக்தர்களை முட்டி தள்ளி விடுகிறது. இதனால் பக்தர்கள் பலர் காயமடைந்து உள்ளனர். இதனை தவிர்க்க நகராட்சி நிர்வாகம், அக்னி தீர்த்த கரையில் பந்தலுடன் தடுப்பு வேலி அமைத்து, இங்கு மாடுகளை அடைக்க மாடு வளர்ப்போரிடம் அறிவுறுத்தியது. ஆனால் மாடு வளர்ப்போர் கண்டு கொள்ளவில்லை. இதனால் மாடுகள் மீண்டும் அக்னி தீர்த்த சாலையில் உலா வருவதால் பக்தர்கள் பீதி அடைகின்றனர்.