கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழாவின் மூன்றாம் நாள் விழாவில் பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை பழைய வண்டிப்பாளையம் செங்குந்த மரபினர்கள் சார்பில் பல்லக்கிலும், இரவு பூத வாகனங்களிலும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 29ம் தேதி, காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு தெருவடைச்சான் உற்சவம், 2ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 5ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐ தீக நிகழ்ச்சி, இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவில் 186 ஆம் ஆண்டு குருபூஜை பெருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.