பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
05:06
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உருமாண்டம்பாளையத்தில் பட்டத்தரசி அம்மன், மாகாளியம்மன், மதுரை வீரன், கருப்பராயன் திருக்கோவில் உற்சவ திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி கடந்த, 23ம் தேதி பூச்சாட்டு, சாமி காப்புகட்டுதல் நடந்தது. நேற்று விழாவை ஒட்டி அதிகாலை, 4:00 மணிக்கு பூச்சட்டி எடுத்தல், கரகம் அழைத்தல், அலகு குத்துதல், எல்லை மாகாளியம்மன் கோவிலில் இருந்து சிம்ம வாகனம் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று வியாழக்கிழமை மதியம் மஞ்சள் நீராடுதல், சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், அலங்காரம் மற்றும் நாளை காலை, 9:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார், ஊர் பெரியவர்கள், மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.