திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குரு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2023 05:06
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடந்தது. புஷ்பவனேஸ்வரர் ஆலய நால்வர் சன்னதியில் திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா வருடம் தோறும் நடைபெறும் , இந்தாண்டு விழா நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. பாண்டியநாடும் திருஞானசம்பந்தரும் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு, உற்சவமூர்த்தி வீதியுலா உள்ளிட்டவைகள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை நாயன்மார்கள் குரு பூஜை அன்பர்களும் ஸ்ரீ வேலப்பர் தேசிகர் திருக்கூட்டத்தினரும் செய்திருந்தனர்.