Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மேலையூர் உலகநாயகி அம்மன் கோயில் ... வைகாசி வெள்ளி; ஜெய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை வைகாசி வெள்ளி; ஜெய மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 24 கருட சேவை; பக்தர்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 24 கருட சேவை; பக்தர்கள் பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2023
11:06

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 89ம் ஆண்டாக ஒரே இடத்தில் 24 கருட சேவை விழா இன்று  நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் தொடர்ந்து 89ம் ஆண்டாக இந்த விழா நேற்று  தொடங்கியது. இதில், வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, 24 கருட சேவை விழா இன்று (09ம் தேதி) நடைபெற்றது. இதில், 24 கோவில் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி அந்தந்த கோயிலிலிருந்து காலை 6 மணியளவில் புறப்பட்டு, கொடி மரத்து மூலைக்கு 7 மணியளவில் சென்றடைந்தனர்.
அங்கிருந்து ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலிலும், அதைத் தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், நரசிம்ம பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கொண்டிராஜபாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், அய்யன்கடைத் தெரு பஜார் ராமசுவாமி, எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், மேல வீதி விஜயராம பெருமாள், நவநீத கிருஷ்ணன், சகாநாயக்கன் தெரு ஸ்ரீ பூலோககிருஷ்ணன், மகர்நோன்புசாவடி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், நவநீதகிருஷ்ணசாமி, கொள்ளுபேட்டைத் தெரு வேணுகோபால சுவாமி, பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயணப் பெருமாள், கரந்தை வாணியத் தெரு படித்துறை வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் வரிசையாகக் கருட வாகனங்களிலும் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வலம் சென்றனர். ஒரே இடத்தில் எழுந்தருளிய 24 கோவில் பெருமாள்களை ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். பின்னர், கொடி மரத்து மூலைக்குச் சென்று, அந்தந்த கோவில்களுக்குச் சென்றடைந்தனர். மூன்றாவது நாளான நாளை (ஜூன்.10ம் தேதி) காலை 6 மணிக்கு நவநீத சேவை விழா நடைபெறவுள்ளது. இதில், 15 கோவில் பெருமாள்கள் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் செல்லும் வைபவம் நடைபெறும். இந்த விழா 11ம் தேதி விடையாற்றியுடன் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 68 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரையில் பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஈச்சனாரி விநாயகர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு ... மேலும்
 
temple news
கடலுார்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார்.கடலுார் ... மேலும்
 
temple news
திருப்போரூர்; செங்கல்பட்டு, திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar