பதிவு செய்த நாள்
15
ஜூன்
2023
10:06
மிருகசீரிடம் - 3, 4: புதுமையான சிந்தனைகளால் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் ராசியில் தைரியாதிபதி சூரியன் இருக்கிறார். நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் பஞ்சமாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் புதன் விரைய ஸ்தானத்தில் இருக்க நட்சத்திராதிபதி செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். சுக ஸ்தானத்தி குரு பகவான் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். ராஹு பகவான் லாப ஸ்தானத்தில் குரு பகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 4
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 27, 28
திருவாதிரை: தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திராதிபதி ராகு கேது பகவானின் சாரம் பெற்று இருக்கிறார். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். ராஹூ பகவான் லாப ஸ்தானத்தில் குரு பகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசியில் இருப்பதால் தைரியமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 5
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 28, 29
புனர்பூசம் - 1, 2, 3: குணத்தில் சாந்தமாக இருக்கும் அதே வேளையில் உங்களை யாரேனும் வேலையில் வேகத்துடன் செயலாற்றும் உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திராதிபதி குரு சுக்ர பகவானின் சாரம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். ராசிநாதன் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 6
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 29, 30