அமர்நாத் யாத்திரை தொடங்கியது: ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2023 12:06
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று துவங்கியது.
ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மொத்தம் 62 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் சிவ பக்தர்களின் முதல் குழுவின் பயணத்தை துவங்கி வைத்தார். ஹர ஹர மகாதேவா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சென்றனர். 62 நாட்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரையில் கலந்துக் கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ், இந்திய ராணுவம் மற்றும் பிஎஸ்எஃப் என பல்வேறு பாதுகாப்பு ஏஜென்சிகள் ஜம்மு- காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஜம்மு முதல் காஷ்மீர் வரையிலும், சர்வதேச எல்லையில் இருந்து கட்டுப்பாடு கோடு வரை பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.