பதிவு செய்த நாள்
21
ஆக
2023
03:08
திருப்பதி: திருமலை திருப்பதியில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
புராணங்களின் படி, ஸ்ரீநிவாஸர் வெங்கடாத்ரி மலையில் தோன்றிய நாட்களில் பிரம்மாவை அழைத்து, உலக நலனுக்காக விழாக்களை நடத்த உத்தரவிட்டார். சுவாமியின் கட்டளையின்படி, பிரம்மா ஆனந்த நிலையத்தின் நடுவில் ஸ்ரீவெங்கடேஸ்வரர் அவதரித்த ஸ்ரவண நட்சத்திரத்துடன் ஒன்பது நாட்கள் திருவிழாக்களை (பிரம்மோற்சவங்கள்) ஏற்பாடு செய்தார். எனவே இவை பிரம்மோற்சவம் என்று அழைக்கப்பட்டு, அன்றிலிருந்து விழா தடையின்றி நடந்து வருகின்றன. அதன்படி, இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறவிருக்கிறது.
செப்டம்பர் மாதம் ஒரு முறையும் அக்டோபர் மாதம் ஒரு முறையும் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலை திருப்பதியில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தம். உலகம் முழுவதிலும் இருந்து பெருமாள் பக்தர்கள் இந்த விழா நாட்களில் பெருமாள் தரிசனம் பெற குவிவர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். அந்தவகையில் இந்த வருடம் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீ வாரி பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதமும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் மாதமும் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ வாரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்:
18/09/23 மாலை 5:30 கொடியேற்றம்
19/09/23 காலை சின்ன சேஷ வாகனம்,இரவில் அன்னவாகனம்
20/09/23 காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம்
21/09/23 காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம்
22/09/23 காலை மோகினி அவதாரம் மாலை கருட வாகனம்
23/09/23 காலை அனுமன் வாகனம் மாலை தங்க ரதம் இரவில் யானை வாகனம்
24/09/23 காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திர பிரபை வாகனம்
25/09/23 காலை தேரோட்டம் இரவில் குதிரை வாகனம்
26/09/23 காலை சக்ரஸ்நானம்
நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிரல்;
15/10/23 இரவில் பெரிய சேஷ வாகனம்
16/10/23 காலை சின்ன சேஷ வாகனம் இரவில் அன்ன வாகனம்
17/10/23 காலை சிம்ம வாகனம் இரவில் முத்து பந்தல் வாகனம்
18/10/23 காலை கல்ப விருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம்
19/190/23 காலை மோகினி அவதாரம் இரவில் கருட வாகனம்
20/10/23 காலை அனுமன் வாகனம் இரவில் கஜவாகனம்
21/10/22 காலை சூர்யபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம்
22/10/23 மாலை தங்க ரதம் இரவில் குதிரை வாகனம்
23/10/23 சக்ர ஸ்நானம்
ஆர்ஜித சேவைகள் ரத்து; பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் 18 முதல் 26 வரையிலும், அக்டோபர் 15 முதல் 23 வரையிலும் அஷ்டதள பாதபத்மராதனம், திருப்பாவாடை, கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதிபாலங்கர சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் சஹஸ்ரதிபாலங்கர சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.