கல்யாணகருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்; ஹெலிகாப்டரில் மலர்தூவி நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 03:08
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே திருமங்கலம் தாலுகா வாகைக்குளம் ஆயன் அனஞ்சபெருமாள் கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஆக. 19ம் தேதி மாலை விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. ஆக. 20 ல் இரண்டு, மற்றும் மூன்றாம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 6.30 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலை 9.20 க்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கொண்ட கடம் புறப்பாடு, தொடர்ந்து கருவறை, ராஜகோபுர கலசங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் கலந்த மலர்கள் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. சுவாமிகளுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகளில் மதுரை ஆதீனம் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயன் அனஞ்சபெருமாள் வம்சத்தார்கள், பெரியபூசாரி, சின்னபூசாரி, 21 கோடாங்கிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.