சந்திராயன் 3 வெற்றிக்கு.. கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு வழிபாடு; தேசிய கொடி அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 02:08
பொள்ளாச்சி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன்.14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் இன்று (23ம் தேதி) மாலை 6:04 மணியளவில் நிலவில் தரையிறங்குகிறது, சந்திராயன் 3 வெற்றிக்காக பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேசிய கொடி அலங்காரத்தில் அம்மன் பகதர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.