நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரின் வெற்றிக்கு அனைவரும் பிரார்த்தனை செய்வோம்; வெற்றி நமதே..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 03:08
உலகில் எந்த நாடும் இதுவரை செய்ய முடியாத சாதனையான, நிலவின் தென் துருவத்தை ஆராயும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆரம்பப் புள்ளி விக்ரம் லேண்டரின் வெற்றிகரமான தரையிறக்கம் ஆகும். அதற்காக நாடு முழுவதும் மதங்களை கடந்து பலரும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.
சந்திரயான் திட்டத்திற்கு சவாலான நிலவின் தென் துருவம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு சில பகுதிகளில் இதுவரை சூரிய ஒளியே பட்டது இல்லை. இங்கு ஆய்வு செய்வதன் மூலம் சூரியக்குடும்பம் உருவான சமயத்தில் எந்த மாதிரியான சூழல், வேதிக்கலவைகள் இருந்திருக்கும் என்பதை கணிக்க முடியும். விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி, ரோவர் வெளி வந்தால், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். அதற்காக மதங்களை கடந்து பலரும் நேர்மறை எண்ணத்துடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.