புதுச்சேரி; முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 52 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி அனுமன் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.