பதிவு செய்த நாள்
26
ஆக
2023
12:08
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக, ரூ.2.66 கோடி கிடைத்தது.
திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதம் தோறும் எண்ணப்படுவது வழக்கம். ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, 23ம் மற்றும் 24ம் தேதி இரு நாட்கள் நடந்தது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் கார்த்திக் முன்னிலை வகித்தார். துாத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்துார் அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் செந்தில் நாயகி ஆகியோர் மேற்பார்வையில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம், குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர், பொதுமக்கள் பார்வையாளராக மோகன், கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், கோயில் நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 49 லட்சத்து ஆயிரத்து 165, கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.20 ஆயிரத்து 250, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.82 ஆயிரத்து 595 அன்னதான உண்டியல் மூலம் 16 லட்சத்து 45 ஆயிரத்து 390ம், சிவன் கோயில் அன்னதானம் உண்டியல் மூலம் ரூ.15 ஆயிரத்து 184ம் என மொத்தம், ரூ.2 கோடியே 66 லட்சத்து 64 ஆயிரத்து 584 கிடைத்தது. இதில் தங்கம் 1200 கிராம், வெள்ளி 22 ஆயிரம் கிராம் கிடைத்தன. வெளிநாட்டு கரன்சி 572 கிடைத்தன.