திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களாக 24 பேர் நியமனம்; 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2023 01:08
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்கள் 24 பேர் பட்டியல் ஆந்திரா அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி கடந்த ஆக.,10ம் தேதி நியமிக்கப்பட்டார். மீதமுள்ள உறுப்பினர்கள் 24 பேர் பட்டியல் ஆந்திரா அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் பாலசுப்ரமணியன், சென்னை எஸ்.சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ஆகிய 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்கள் விபரம்:
பொன்னாட வெங்கட சதீஷ்குமார் எம்.எல்.ஏ உதயபானு சாமினேனி எம்.எல்.ஏ எம்.திப்பே சுவாமி எம்.எல்.ஏ சித்தாவதம் யனாதையா சண்டே அஷ்வர்த நாயக் மேகா சேசுபாபு ஆர்.வெங்கட சுப்பா ரெட்டி எல்லாரெட்டி கேரி சீதாராம ரெட்டி காதிராஜு வெங்கட சுப்பராஜு பெனகா சரத் சந்திர ரெட்டி ராம் ரெட்டி சாமுலா பாலசுப்ரமணியன் பழனிசாமி எஸ்.ஆர்.விஸ்வநாத் ரெட்டி திருமதி. கடம் சீதா ரெட்டி கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் சித்த வீர வெங்கட சுதீர் குமார் சுதர்சன் வேணு நேரு நாக சத்தியம் ஆர்.வி.தேசபாண்டே அமோல் காலே டாக்டர் எஸ்.சங்கர் மிலிந்த் கேசவ் நர்வேகர் டாக்டர் கேதன் தேசாய் போரா சௌரப்