பதிவு செய்த நாள்
26
ஆக
2023
01:08
சென்னை: முருகு என்றால் அழகு. அழகு, அறிவு, ஆற்றல் இவையனைத்தும் தன்னகத்தை கொண்டு தந்தைக்கு குருவாகி, தேவர்களுக்கு செல்ல பிள்ளையாகி பக்தர்களின் மனதில் குடிகொண்டு, பரமானுக்ரஹ மூர்த்தியாக விளங்கும் முருகபெருமான் ஜோதி நகர், ஈக்காட்டுத்தாங்கலில் சிவசுப்பிரமணிய சுவாமியாக தன் தேவியாருடன், எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இங்கு மங்களகரமான சோபகிருது வருடம். ஆவணி மாதம். 17-ம் தேதி (03-9-2023) ஞாயிற்றுக்கிழமை. ரேவதி நட்சத்திரம், சதுர்த்தி திதி. 9-00 அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10-30மணிக்கு மேல் துலாம் லக்னத்தில் ஜீரோணத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு நாளை ஆவணி 10 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 – 9.00 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆவணி 15 செப்., 01ம் தேதி 8.00 மணி முதல் மங்கள இசை, கோபூஜை, கணபதி, லஷ்மி, நவக்கிரகஹோமம், தன பூஜை, கண்யாபூஜை, தம்பதி பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல். மங்கள வாத்தியம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி ம்ருத்சங்கிரஹனம், கலாகர்ஷணம், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதல்கால யாகபூஜைகள் ஆரம்பம்,
ஆவணி 16 செப்., 02 சனிக்கிழமை மாலை 5-30 மணி முதல் மங்கள வாத்தியம், பிம்ப ப்ரதிஷ்டை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பருஷாவந்தி, மூன்றாம்கால யாகபூஜைகள் ஆரம்பம், பூர்ணாஹுதி, சதுர்வேத உபசாரம், திருமுறை பாராயணம், மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல். பூர்ணாஹூதி, சதுர்வேத உபசாரம், திருமுறை பாராயணம், மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல். மங்கள புதிய விக்ரகங்களுக்கு அஷ்டாதன் இரண்டாடரை கரிகோலம், வாகபூஜைகள் ஆரம்பம், பூர்ணாஹ நீ, சதுர்வேத உபசாரம், திருமுறை பாராயணம், மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
காலை 7-00 மணி முதல் காலை 9-00 மணிக்கு நான்காம்கால யாகபூஜைகள் ஆரம்பம், யாத்ராதானம் சங்கல்பம். காலை 9-30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9-45 மணிக்கு,
ஆவணி 17 செப்., 03 ஞாயிற்றுக்கிழமை விமானம் மற்றும் ஸ்ரீ ஜோதி விநாயகர், அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ராம நந்தீஸ்வரர் கைலாய வாத்தியம் மற்றும் மங்கள இசையுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 10-30 மணிக்கு மஹாபிஷேகம், சதுர்வேத உபசாரம் திருமுறை பாராயணம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல். மாலை 7-00 மணிக்கு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
கும்பாபிஷேக சர்வ சாதகம் சர்வசாதக காலநிதி ஆகம சிரோன்மணி
சிவஸ்ரீ ஷண்முக சிவாசாரியார்
வடபழனி,
செல்: : 9840200402