பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் மாணவர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி முதல்வர் அன்பரசி வரவேற்றார். பள்ளி துணை தாளாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். பி.டி.ஏ. தலைவர் உன்னிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஓணத்தை வரவேற்கும் விதமாக பள்ளி வளாகத்தில் மெகா சைஸ் பூக்கோலம் போடப்பட்டது. அதில் சந்திரயான் -3 நிலவில் இறங்கிய காட்சியை, பூக்களை கொண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் வடிவமைத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. மேலும் மகாபலி மன்னன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் பூக்கோலத்தை சுற்றிலும் வண்ணமயமான நடனங்களை அரங்கேற்றினார்கள். இது பெற்றோர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.