1000 ஆண்டுகள் பழமையான மூலநாத சுவாமி கோயில் முன் தேங்கும் மழைநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2023 05:08
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் முன் ஊராட்சி நிர்வாகத்தால் சில ஆண்டுகளுக்கு முன் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. உரிய திட்டமிடல் இன்றி கோயில் கோபுர நுழைவாயில் முன் கற்கள் பதிக்கப்படாமல் விடப்பட்டது. இதனால் மழைநேரங்களில் கோயில் முன் மழைநீர் தேங்குகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதியை கடந்து செல்வோர் வழுக்கி விழும் நிலை உள்ளது. பல நாட்கள் தேங்கும் நீரால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பகுதியில் செல்லும் வடிகால் வழியாக மழைநீர் வெளியேற ஊராட்சி மற்றும் அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.