ஆழ்வார்திருநகரி: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பவித்ரோத்சவ கருட சேவை நடந்தது. கோயில்களில் தினசரி நடைபெறும் பூஜை புனஸ்கார முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரங்களாக பவித்ரோத்சவம் நடத்துவதும் வழக்கம். அதன்படி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கடந்த 5 நாட்கள் பவித்ரோத்சவம் நடந்தது. எட்டு நாள் நடை பெறுகின்ற இந்த உத்சவத்தில் 5ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 9 மணிக்கு சிறப்பு ஹோமம். நாலாயிர திவ்யப்பிர பந்த சேவைகள் நடந்தது. 12 மணிக்கு சாத்து முறை, தீர்த்தம், சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5.30மணிக்கு ஹோமம். 6.30 மணிக்கு சுவாமிகள் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ் வார் எழுந்தருளினர். 7 மணிக்கு பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் மாட வீதி புறப்பாடு நடைபெற்றது.