சிங்கம்புணரி: சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஆக. 30 ஆம் தேதி அனுக்ஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால பூஜையாக நடத்தப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு கோ பூஜை, லட்சுமி பூஜை நடத்தப்பட்டு 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. சேவுகப்பெருமாள் கோயில் சிவாச்சாரியார்கள் அருணகிரி, சேவற்கொடியோன், சேதுராமலிங்கம் ஆகியோர் யாகபூஜை, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வீரமுத்தி அம்மன் கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.