வலையபாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்; கரகம், தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2023 12:09
அவிநாசி: அவிநாசி அடுத்த வலையபாளையத்தில் எழுந்தருளியுள்ள கரியகாளியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் கரகம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி வட்டம், சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையத்தில் எழுந்தருளியுள்ள கரியகாளியம்மன் மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு நாளை (3ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்காக நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் கரகம் எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். கும்பாபிஷேகத்திற்காக இன்று (2ம் தேதி)முதல் கால யாக வேள்வியில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகாலட்சுமி, நவக்கிரகம், மூல மந்திரம் ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது. நாளை இரண்டாம் கால யாக வேள்வியில் நாடிசந்தனம், யாத்திராதானம் ஆகிய நிகழ்சிகளை தொடர்ந்து கரியகாளியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தசதானம், மஹா அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வலையபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.