பதிவு செய்த நாள்
02
செப்
2023
12:09
திருச்செந்துார்: திருச்செந்துார், வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித்திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா, கடந்த மாதம் 23ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா காலங்களில், அம்பாள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். முக்கிய திருவிழாவான 10ம் திருவிழா நேற்று காலை 6:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளி ரதவீதி சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில், கோயில் சூப்பரின்டென்ட் ஆனந்தராஜ், கோயில் பணியாளர்கள் ராஜ்மோகன், ஆவுடையப்பன், செல்லகுத்தாலம், பால்ராஜ், மாரிமுத்து, மணியம் நெல்லையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு அம்பாள் அலங்கார சப்பரத்தில், சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி, சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்து கோயிலை சேர்ந்தார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.