சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2023 06:09
சிங்கம்புணரி: சிவபுரிபட்டி தர்மஸம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பாலாலயம் நடந்தப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கோயிலாகும். இங்கு சுவாமியும் அம்பாளும் தனித்தனியாக கோயில் கொண்டுள்ளனர். இக்கோயிலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கும்பாபிஷேம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து இன்று பாலாலய விழா நடந்தது. கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சுகன்யா முன்னிலை வகித்தனர். ரவி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் யாக பூஜைகளை நடத்தி வைத்தனர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. விழாவில் கிராம மக்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.