அக்.8ல் ராகு பெயர்ச்சி; திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2023 05:10
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே வட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள கிரிகுஜாம்பிகையம்மன், பிறையணியம்மன் உடனாய நாகநாதசுவாமி கோவிலில் உள்ள ராகு பகவான் மங்கள ராகுவாக காட்சியளிக்கிறார். ராகுபகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகரும் நிகழ்வான, ராகு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு வரும் அக்.8ம் தேதி மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதற்கட்ட லட்சார்ச்சனை இன்று (அக்.2ம் தேதி) துவங்கி வரும் அக்.4ம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது. 2ம் கட்ட லட்சார்ச்சனை வரும் அக்.9ம் தேதி முதல் அக்.11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் உமாதேவி, உதவி ஆணையர் சாந்தா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.