பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி கோயிலில் இன்று முதல், தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. நவராத்திரி விழா இன்று முதல் அக்., 24 வரை நடைபெற உள்ளது. பழநி கோயில் தங்கரதம் புறப்பாட்டிற்கு, பக்தர்கள் தினமும் காணிக்கை செலுத்துவது சிறப்புடையது. நவராத்திரியையொட்டி, இன்று முதல் 24 வரை தங்கரத புறப்பாடு இல்லை. மேலும், இன்று பழநி கோயில் மூலவர் சன்னதியில், உச்சிக்காலத்தில் காப்புக்கட்டுதல் நடைபெறும். தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் சாயரட்சையில், சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.