புரட்டாசி சனி; அனுக்கிரக மூர்த்தியை தரிசிக்க திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2023 05:10
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகாவன் கோவிலில் இன்று மூன்றாவது சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்..
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் சென்னை.சேலம், திருச்சி மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு வருகைப்புரிந்தனர். அதிகாலை 4:30 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்தத்தில் அதிகாலை புனித நீராடி,கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற்றினார். மேலும் வரும் டிசம்பர் 20ம் தேதி 5.20மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. சனீஸ்வர பகவான் மகரராசியிலிருந்து கும்பராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது பாதுகாப்பு நலன்கருதி எஸ்.பி.சுப்ரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.மேலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.