பதிவு செய்த நாள்
10
அக்
2023
11:10
மைசூரு: தசராவை ஒட்டி, மைசூரு அரண்மனையில் நேற்று தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் விஜயதசமியை ஒட்டி, மைசூரில் பத்து நாட்கள் நடக்கும், தசரா உலகப்புகழ் பெற்றது. மன்னர் காலத்தில் இருந்தே , தசரா வெகு விமரிசையாக
கொண்டாடப்பட்டு வருகிறது. மன்னர் காலத்தில் தசராவை ஒட்டி, தங்கம் , வெ ள்ளி, வைரம், நவரத்தினங்களால் ஆன சிம்மா சனத்தில் அமர்ந்து, பொதுமக்கள் குறைகளை மன்னர்கள் கேட்பர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து, கர்நாடகா தனி மாநிலமாக உருவெடுத்த பின்னர், சிம்மாசனம் அரசு சொத்தாக மாறியது. மைசூரு அரண்மனையின் கடைசி மன்னர் ஜெய சாமராஜா உடையார் காலத்தில், சிம்மாசனம் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிம்மாசனத்தை ஒன்பது பாகங்களாக பிரித்து, மைசூரு அரண்மனையின் ஒரு அறையில் வைத்து, அரண்மனை நிர்வாக அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தசரா நடக்கும் போது, சிம்மாசனத்தின் பாகங்கள் வெளியே எடுக்கப்பட்டு ஜோடிக்கப்படும். இந்த ஆண்டுக்கான தசராவை முன்னிட்டு, மைசூரு அரண்மனையில் உள்ள , அம்பா விலாஸ் தர்பார் ஹாலில், நேற்று காலை 8:00 மணியில் இருந்து 10:00 ம ணி வரை சண்டி ஹோம் , கணபதி ஹோம் , சாமுண்டீஸ்வரி பூஜை , நவ கிரஹபூஜை நடத்தப்பட்டது. அதன்பின், சிம்மாசனத்தை ஜோடிக்கும் பணி துவங்கியது.
அரண்மனையின் மகாராணி பிரமோதா தேவி, இளைய மன்னர் யதுவீர், மைசூரு கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானுாத், அரண்மனை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், கண்காணிப்பில் சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. மதியம் 1: 00 மணிக்கு சிம்மாசனம் ஜோடித்து முடிக்கப்பட்டது. மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா கெஜ்ஜஹள்ளி கிராமத்தின் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர், சிம்மாசனத்தை ஜோடித்தனர். அதன் பின்னர் சிம்மாசனம் துணியால் மூடி வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி சிம்மாசனத்திற்கு, இளைய மன்னர் யதுவீர் சிறப்பு பூஜை செய்வார். அதன்பின்னர் காலை 10:00 மணி முதல் காலை 10:30 வரை ; மாலை 5:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை , சிம்மாசனத்தில் அமர்ந்து, ‘தனியார் தர்பார்’ நடத்துவார். இந்நிகழ்ச்சி 23ம் தேதி வரை தினமும் நடக்கும்.