பதிவு செய்த நாள்
22
அக்
2023
02:10
அவிநாசி: சாய் பாபா மந்திர் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ நவ சண்டி ஹோம விழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் பாபா மந்திர் கோவிலில் திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் ஸ்ரீ நவ சண்டி ஹோம விழா நடைபெற்றது. இதில், நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி தொடங்கிய நவசண்டி ஹோமத்தில் ருண மோட்சன சிவ யாகம், திருஷ்டி துர்கா யாகம், சுயம்வர பார்வதி யாகம், லக்ஷ்மி நரசிம்மர் யாகம், தன்வந்திரி லக்ஷ்மி யாகம், நவாக்க்ஷரி யாகம், சந்தான கோபாலகிருஷ்ண யாகம், ஹயக்ரீவர் யாகம், துர்கா ஸப்த ஜி யாகம் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நாளை(24ம் தேதி) வரை நவசண்டி ஹோமத்தில் நடைபெறுகின்றது. முன்னதாக, 20 ம் தேதி கணபதி பூஜை, நவகிரக ஹோமம், சுப்பிரமணியர் மூல மந்திர ஹோமம் ஆகியவற்றுடன் நவசண்டி ஹோம விழா துவங்கியது. மேலும், ஸ்ரீ மகாகாளி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சங்கரி, ஸ்ரீ ஜெய துர்கா, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ பத்மாவதி, ஸ்ரீ ராஜா மாதங்கி, ஸ்ரீ பவானி, ஸ்ரீ அர்த்தாம்பிகா, ஸ்ரீ காமேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ அக்னி துர்காம்பிகை, ஸ்ரீ வித்யா தாரிகா பரமேஸ்வரி ஸப்த சதிகாளி உள்ளிட்ட 13 வகையான சண்டிகா பரமேஸ்வரி இந்த யாகத்தில் பூஜிக்கப்படுகிறார்கள். இதில், 96 வகையிலான ஷண்ணவதீ ஹோம பொருட்கள் இதில் உபயோகப்படுத்தப்படுகிறது. புதிய வியாதிகள் தோன்றாமல் இருக்கவும், உலக நாடுகளுக்கிடையே போர்கள் நடைபெறாமல், அன்பு, கருணை, அமைதி என வாழ்க்கையில் தழைக்கவும், உலக மக்கள் நன்மைக்காகவும், பொருளாதார உயர்வு, இயற்கை இடர்பாடுகள் நீங்கிடவும் ஸ்ரீ நவ சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. அதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று ஸ்ரீ சாய் பாபா மந்திர் அறக்கட்டளை தலைவர் ரவி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.