பதிவு செய்த நாள்
17
அக்
2012
03:10
ஜேஸ்டாவின் தோற்றம் சில முக்கியமான தருணங்களினால் அமையப்பட்டது. அவை ஷிரசாகரா என்றும் பாற்கடலை கடையும் போது நடந்தவைகளாகும். தேவர்கள் மற்றும் அசுரர்கள் இருவரும் மிகவும் ஆவலாக அமிர்தத்தை ஷிரசாகராவில் அடைய காத்துக்கொண்டிருந்தனர். அதேசமயம் அமிர்தம் கிடைக்கவிருக்கும் இந்த பாற்கடலை கடைய உத்தரவு கொடுத்தவருமான, ஷிரசாகராவின் அதிகாரமுள்ள சிவபெருமானால் மட்டுமே கிடைக்கிறது என்று உணர்வுள்ளவர்களாய் இருந்தனர். அதனால் இருவருமே கடவுளை, மரியாதையுடனும், பிரார்த்தனர்.சிவபெருமான் இருவருக்கும் பரிசுகளான கட்டளைப்படி என்னவெல்லாம் வருகிறதோ அதனை தேவர்கள் மற்றும் அசுரர்கள் சரிசமமாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதனையும் இருவரும் பயபக்தியுடன் கேட்டுக்கொண்டனர்.
அறியாத பல இயற்கையான பொருட்கள் பாற்கடலை கடைந்தவுடன் வெளிவந்தன. அதிலிருந்து மந்திர பர்வதம், நாராயணன் மற்றும் வாசுகிநாகம் வெளிவந்தது. தேவர்கள் மற்றும் அசுரர்கள் தொடர்ந்து பாற்கடலை கடைந்தனர் அதிலிருந்து மொத்தம் பதினான்கு முத்துக்கள் வந்தன. அதில் ஒரு முத்து மகாலட்சுமியின் வடிவத்தில் வந்தது. பாற்கடலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆலகால என்ற விஷதன்மை வர ஆரம்பித்தது. அந்த விஷத்திற்கு இந்த மொத்த உலகத்தினை அழிக்கும் ஆற்றல் இருந்தது. தேவர்கள் அந்த பதிமூன்று முத்துகளிடம் ஆலகால விஷத்தை அழிக்க உத்தரவு இட்டனர், அதை அவர்களால் ஒன்று செய்ய முடியவில்லை. மிக கொடூரமான விஷதன்மை கொண்டதால் அவை பாற்கடலிலிருந்து கடைந்த அனைத்தையும் விழுங்க ஆரம்பித்தது. அவர்கள் உடனே சிவபெருமானிடம் இதற்கு முடிவு செய்யுமாறு பிராத்தனை செய்தனர். சிவபெருமான் திருலோகிதனாக இவ்வுலகினை காப்பவர். அவர் தன் சக்தியினால் அனைத்து விஷத்தினையும் தானே உட்கொண்டார். ஆனால் தன் உடலில் பாதியாக இருக்கும் பார்வதியை (சிவனின் சக்தி) காப்பதற்காக , அனைத்து விஷத்தினையும் தன் தொண்டையில் சேமித்தார். இதுவே சிவனின் தொண்டை நீலநிறமாவதற்கான காரணம். தேவர்கள் மற்றும் அசுரர்கள் இதனை கண்டு உடனே சிவனுக்கு நீலகண்டன் என்று பெயரிட்டு பிரார்த்தனை செய்தனர்.
தேவர்கள் பரிசாக மகாலட்சுமியை விஷ்ணுவிற்கு அழித்தனர். அசுரர்கள் அதனால் கோபம் அடைந்தனர். அந்த கோபத்தினால் அவளை விஷ்ணுவிடமிருந்து எடுத்து கொண்டு அவளை குப்தகாரா (தற்போது குப்கர்) என்ற குகையில் வைத்தனர். அசுரர்களின் இந்த செயல் சிவபெருமானை பெருங்கோபத்திற்கு காரணமானது. ஜேஸ்டா தேவி மற்றும் வீர வைத்தலா என்ற இரண்டு சக்திகளை அசுரர்களிடமிருந்து மகாலட்சுமியை அழைத்துவர படைத்தார். இக்கடின வேலையை செய்துமுடித்தற்காக சிவன் இருவருக்கு பரிசுகளாக காப்பதற்கான சக்தியை அழித்தார். அன்னை ஜேஸ்டா வெயிலில் காய்ந்த கற்களை தூக்கி எரிந்த இடமே குப்கர் இது ஸ்ரீநகரின் மத்தியிலிருக்கிறது. அன்னை ஜேஸ்டாவை வணங்கும் அனைத்து பக்தர்களையும் காக்கிறாள் மற்றும் அன்னை ஆசீர்வாதம் தடையில்லாமல் கிடைக்கிறது. ஜேஸ்டா மாதத்தின் வியாழக்கிழமைகளில் அன்னைக்கு பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கமாயிற்று.
எல்லா துறைகளிலும் முழுமை, செல்வம் மற்றும் அமைதி பெற காஷ்மீரிலிருக்கும் பிரபலமான பழமைவாய்ந்த இந்த சன்னிதியை உலக மக்கள் அனைவரும் தரிசிக்கின்றனர். இவை தான் புகழ்பெற்ற ஜேஸ்டா மாதா கோயில். உலகத்தில் உள்ள பலபகுதியில் வாழும் மக்களுக்காக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் இக்கோயிலில் பல்வேறு யாகங்கள் நடத்துகிறார்கள்.