பதிவு செய்த நாள்
09
நவ
2023
01:11
சேலம்; சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில் பெருமாள், தாயாருக்கு ஆண்டு முழுதும், ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் அனைத்து உற்சவங்களும் நடத்தப்படுகிறது. அதன்படி ஐப்பசியில், 10 நாட்கள் நடக்கும், ‘டோலோற்சவம்’ எனும் ஊஞ்சல் உற்சவம், கடந்த, 2ல் தொடங்கியது. தினமும் மாலை சிறப்பு அலங்காரத்தில் பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருள செய்து, நாலாயிர திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு, பூஜை நடத்தி பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. விழாவில் சேர்த்தி சேவை நேற்று நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத உபயநாச்சியார்களுடன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து சர்வ அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர். வேதபாராயண கோஷ்டியர்களின் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பெருமாள், தாயார்களுடன் சேர்த்தி சேவையில் காட்சியளித்தார். நாளை சாற்று முறையுடன் டோலோற்சவம் நிறைவு பெறும்.