அவிட்டம் - 3, 4: அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. பரிகாரம்: கெஜலட்சுமியை பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சந்திராஷ்டமம்: டிச.5 அதிர்ஷ்ட தினம் நவ.28, 29
சதயம்: எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலுடைய உங்களுக்கு இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்தி சாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவது நல்லது. கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்ப தில் கவனம்தேவை. பரிகாரம்: துர்க்கை அம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். சந்திராஷ்டமம்: டிச.6 அதிர்ஷ்ட தினம் நவ.29, 30
பூரட்டாதி - 1, 2, 3: அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய உங்களுக்கு இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குரு சாரம் பணவரவைத் தரும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும். சந்திராஷ்டமம்: டிச.7 அதிர்ஷ்ட தினம் நவ.30; டிச.1
மேலும்
கார்த்திகை ராசி பலன் (16.11.2024 முதல் 15.12.2024 வரை) »