சத் பூஜை; நீர் நிலைகளில் குவிந்த மக்கள்.. குடும்ப நலன் வேண்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2023 11:11
பாட்னா: சூரிய பகவானை வணங்கும், சத் பூஜை, காலை சூரிய உதயத்துடன் நிறைவடைந்தது. நேற்று ஞாயிறு துவங்கிய இந்த பண்டிகையை, பீஹார் மற்றும் உ.பி.,யின் கிழக்கு பகுதி மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். இதற்காக, நாட்டில் பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி, கங்கை நதிக்கரையில் வழிபாடு செய்து, விருந்துண்டு மகிழ்ந்தனர். வட மாநிலங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் சத் பூஜை நேற்று மாலை டெல்லி களிஞ்சி குஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றங்கரையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.