பதிவு செய்த நாள்
25
நவ
2023
09:11
மேட்டுப்பாளையம்: வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீர், தேன், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.