திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்; நளன் குளத்தில் நீராடி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2023 03:12
காரைக்கால; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்பவர பகவான் கோவிலில் வரும் 20ம் தேதி சனிபெயர்ச்சி நடைபெறவுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.சனிப்பெயர்ச்சி நடைபெற்ற 10நாட்களே உள்ள நிலையில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்ய முன்னதாக நளன் குளத்தில் நீராடி விட்டு கலிதீர்த்த விநாயகரை வணக்கி சிதறு தேங்காய் உடைந்த பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று 4 மணிக்கு கோவில் நடைத்திறக்கப்பட்ட நிலையில் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று ஸ்ரீசனிபகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.