Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ... கடகம் :  ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 கடகம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024
மிதுனம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024
எழுத்தின் அளவு:
மிதுனம் :  ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

பதிவு செய்த நாள்

31 டிச
2023
12:12

மிருகசீரிடம்; முயற்சி வெற்றியாகும்

செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.
பிறக்கும் 2024 ஆண்டில், மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாட்டில் வேகம், விவேகம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகளில் லாபம் அதிகரிக்கும். 3,4ம்  பாதங்களில் பிறந்தவர்களுக்கு அனைத்திலும் யோகம் என்ற நிலை ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வை வழங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலையை உண்டாக்கும்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்கிடுவார். 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் முயற்சியில் இருந்த தடைகளை விலக்கி வைப்பார். நினைத்த செயல்களை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலையை உருவாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். யோகத்தை உண்டாக்குவார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2ம் பாதங்களில்  பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும்.  திரைத்துறையினருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழிகளிலும் வரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு இழந்த சொத்து, செல்வாக்கை மீண்டும் அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் கனவு நிறைவேறும். எதிர்பாராத ஆதாயம் தோன்றும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார்.  விருப்பங்களையும் நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்குவார். சுபகாரியங்களை நடத்தி வைப்பார். மே 1, முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகள் வழியே அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தருவார்.

சூரிய சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு பிப்.13 -  ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - ஆக 16 வரையிலும்,  அக்.18, - நவ. 15 வரையிலும்,  3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 14 - மே 13 காலத்திலும் ஆக. 17 - செப். 16 வரையிலும், நவ.16, - டிச. 15 வரையிலும் உங்கள் வாழ்வில் பிரகாசமான நிலையை உண்டாக்குவார். பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். அரசுவழி முயற்சிகளில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்
உங்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு வந்து சேரும். கலைத்துறையினர் செல்வாக்கு பெறும் ஆண்டாக இருக்கும்.

தொழில்
இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ், ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்வோருக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும்

பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலனை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவால் நெருக்கடி நீங்கும்.

பெண்கள்
குடும்பத்தினரை அனுசரித்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை அமையும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் ஊதியம் கூடும்.

கல்வி
பொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது அவசியம். விளையாட்டுத்தனமான செயல்களை ஒதுக்கி விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்.

உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். விபத்து, நீண்டநாளாக நோய்வாய்ப் பட்டிருந்தவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்புகள் குறையும்.

குடும்பம்
வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்தவற்றை செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வாகனம் வீடு  அமையும்.

பரிகாரம்; ராகு கேதுவிற்கு பூஜை செய்து, காளத்தீஸ்வரரை வணங்க நன்மை உண்டாகும்.


திருவாதிரை; நல்லநேரம் வந்தாச்சு

புதன், ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். பணவரவில் தடைகள் விலகும். நெருக்கடிகள் நீங்கும். அரசியலில் மதிப்பு உயரும். கோயில்களுக்கு நிதியுதவி செய்வதுடன் பங்கேற்கவும் செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலர்  புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். களவு போன பொருள்  கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.
சனி சஞ்சாரம்
 சனி பாக்கிய ஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அஷ்டம சனியின் பாதிப்பு நீங்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் தடைகள் விலகும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணவரவு அதிகரிக்கும். பகைவர் தொல்லைகள் விலகும்.

ராகு - கேது சஞ்சாரம்
10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ராகுவும், 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் கேதுவும்  சஞ்சரிக்கும் நிலையில் தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கேட்ட இடத்திலிருந்து உதவி தேடி வரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வேலை இல்லாதவர்களுக்கு தகுந்த வேலை அமையும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை லாப ஸ்தான குருவால் வாழ்வு வளமடையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். வருமானம் பலவகையிலும் அதிகரிக்கும். மே1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், உடல்நிலை பாதிப்பு நீங்கும். மனதில் இருந்த பயம் போகும். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். வழக்குகளில் வெற்றியுண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
மார்ச் 14  - மே 13, ஆக.17 - செப். 16, நவ 16 -  டிச 15 காலங்களில் அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழிஅமைப்பார். லாபத்தை அதிகரிப்பார். எதிரி தொல்லை இல்லாமல் செய்வார். வழக்குகளில் சாதக நிலை ஏற்படுத்துவார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகளை முடித்து வைப்பார்.

பொதுப்பலன்
கிரக சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். திட்டமிட்ட செயல்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். வழக்குகள் சாதகமாகமாகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.  சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும்.

தொழில்
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வாகனம், இயந்திரம், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், தொலைக்காட்சி, சினிமா, ஏற்றுமதி இறக்குமதி வியாரம் லாபமாகும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் சங்கடங்கள் குறையும். உழைப்பிற்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு என எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசுப் பணியில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவதுடன் விரும்பிய இடமாற்றத்தை அடைவர். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும்.

பெண்கள்
முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உடல்நிலையில் சங்கடம் நீங்கும். கணவருடன் இருந்த சச்சரவு விலகும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும். அரசுப்பணிக்கு முயற்சித்தவர்களுக்கு வெற்றி உண்டாகும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். விரும்பிய பொருளை வாங்குவீர்கள்.

கல்வி
படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியாமல் போகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம்.

உடல்நிலை
நீண்ட நாளாக இருந்த பாதிப்பு விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இனம் புரியாத நோய்களால் அவதிப்பட்ட நிலை மாறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பம்
சங்கடமான நிலைகள் மாறத் தொடங்கும். வருமானத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது என எண்ணங்கள் நிறைவேறும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை விலகும் வீட்டில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பரிகாரம்; திருவெண்காடு புதன் பகவானை தரிசிக்க நன்மை அதிகரிக்கும். சங்கடம் விலகும்.


புனர்பூசம்; நெருக்கடி விலகும்

குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.
 2024ம் வருடத்தில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் எல்லாம் விலகும். விரும்பியது கைக்கு வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்புகள், பணியில் பதவி உயர்வு ஏற்படும். மற்றவர்களால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக் காட்டும் வல்லமை உண்டாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் ஏற்படும். புதிய முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியடைவீர்கள். எதிர்பாராத வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைக்காக, உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிரிகளால் சங்கடம் ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன் வழங்கிடுவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் உண்டாகும்.  1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தினருக்கு அஸ்தமனம் மற்றும் வக்கிர காலங்களில் நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபமாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயமாகும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்மை தரும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வருமானத்தை உயர்த்துவார். வீட்டில் சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை உண்டாக்குவார். கடன்களை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் தொழிலில் மந்த நிலையை உண்டாக்குவார். வருமானத்தில் தடையை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் சில பிரச்னைகளை உண்டாக்குவார். மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பண வரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், குடும்பம், உத்தியோகம் என எல்லாவற்றிலும் யோகப்பலனை வழங்குவார். கன்னியருக்கு திருமணம், குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு அந்த பாக்கியம் அருள்வார்.

சூரிய சஞ்சாரம்
புனர்பூசம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச் 14 - மே 13 வரையிலும், ஆக 17 - செப் 16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜன 1 - 14 மற்றும், ஏப் 14 - ஜூன் 14 வரையிலும், செப் 17 - அக் 17 வரையிலும் செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகளில் இருந்து உங்களை வெளியில் கொண்டு வருவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். இழுபறியான வழக்குகளை சாதகமாக முடித்து வைப்பார். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்புகளை அடைய வைப்பார். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடம் மாற்றம், பணி உயர்விற்கு வழியமைப்பார்.


பொதுப்பலன்
நெருக்கடி யாவும் நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடன்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். செயல் யாவும் வெற்றி பெறும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் இலக்கை அடைவீர்கள்.

தொழில்
மருத்துவம், கல்வி, ஏற்றுமதி, இறக்குமதி, சின்னத்திரை, இயந்திர தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், விவசாயம் ஆகிய தொழில்களைச் செய்வோர் வளர்ச்சியடைவர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்
உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்ட நிலை மாறும். உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், கல்வியாளர்களின் நிலை உயரும்.

பெண்கள்
சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வேலைத்தேடியவர்களுக்கு தகுதியான வேலை அமையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும்.

கல்வி
படிப்பில் அக்கறை இருந்தாலும் இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். உயர்கல்வி பெறும் கனவு நிறைவேறும்.

உடல்நிலை
கடந்த கால பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையின் காரணமாக எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத் திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு சரியாகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்றவற்றில் கவனம் செல்லும். புதிய வாகனம், வீடு என்ற நீண்டநாள் கனவு நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். உறவினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்; அனுமனை சனிதோறும் வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 »
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை; உழைப்பால் உயர்வுசூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தாலும் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ... மேலும்
 
temple news
கார்த்திகை  2, 3, 4: சேமிக்கும் பழக்கம் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் - 3, 4: புதிய முயற்சிகளில் திட்டமிட்டு வெற்றி பெறும் உங்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar